BREAKING NEWS

மறுமணம் செய்து கொண்ட இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் மனைவி மோனிகா,

மறுமணம் செய்து கொண்ட இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் மனைவி மோனிகா,

`உங்களுடன் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்'- டி.இமானின் முன்னாள் மனைவி ஆதங்கம்

மறுமணம் செய்து கொண்ட இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் மனைவி மோனிகா, “உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமானுக்கும், மோனிகாவுக்கும் கடந்த 2008-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில், அமலி உபால்ட் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் இமான்.

இது குறித்து விமர்சித்துள்ள முதல் மனைவி மோனிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் டி.இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துகள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )