மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த தின விழா கேரள மாநில திமுக சார்பில் ஜுன் மாதம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக கொல்லம் மாவட்டம், புனலூர் பவர் ஆபீஸ் அருகில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். புனலூர் திமுக நிர்வாகிகள் கிரீஸ் குமார், ரினுராஜன், ஜிஜோ, அஜ்மல், ஷாம்லால், ஷாலினி, சுபலட்சுமி, துரை பேச்சிமுத்து, முகமது ஷாபி, வழக்கறிஞர் அருள்ஜோதி, சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொல்லம் மாவட்ட செயலாளர் ரெஜீராஜ் வரவேற்றார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கேரள நிர்வாகிகள் சார்பில் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது.
தொடர்ந்து 300 மாணவ, மாணவிகளுக்கு தலா 5 நோட்டு புத்தகங்கள் வீதம் முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீ;ல் சிவபத்மநாதன், மற்றும் கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் வழங்கினர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கேரள நிர்வாகிகள் நோட்டு புத்தகங்களை வழங்கவுள்ளனர்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான அத்தலிடிக்ஸ் போட்டியில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீராம் என்பவரை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து 9, 10, 11, 12 ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் பாராட்டி பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகையினை சிவபத்மநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளான மாவட்ட துணைச்செயலாளரும். மாவட்ட கவுன்சிலருமான க.கனிமொழி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.சாமித்துரை, ரவிச்சந்திரன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், தொண்டரணி தலைவர் வெங்கடேசன், வக்கீல் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், அய்யன்சாமி, கூட்டுறவு சரவணன், வார்டு செயலாளர் வேல் அய்யப்பன், முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் (எ) தினேஷ், இளைஞரணி அரவிந்த் திலக், நவீன், வக்கீல் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் அண்ணாத்துரை, கருணாநிதி, அருணாபாண்டியன், காளிராஜ், திருமலைக்குமார், அருணாசலம், ராசேந்திரன், பால்ராஜ், காசிபாண்டி, துரை பேச்சிமுத்து, துரைசாமி,ஏ.பி.என்.குணா, ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.