BREAKING NEWS

மலை ரயில் கழுகு பார்வை காட்சிகள் தென்னக ரயில்வே வெளியீடு

மலை ரயில் கழுகு பார்வை காட்சிகள் தென்னக ரயில்வே வெளியீடு

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் உதகைக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரயில்களை இயக்குவதென தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.அந்தவகையில் கடந்த 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் மலை ரயில் பாரம்பரிய தினம் வருகிற ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி மலை ரயில் ஊர்ந்து செல்லும் அழகிய காட்சிகளை டிரோன் மூலம் கழுகுப் பார்வை காட்சிகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.இதன் மூலம சர்வதேச அளவில் சுற்றுலா மேன்மையடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this…

CATEGORIES
TAGS