BREAKING NEWS

மழையில் சுவர் இடிந்து சேதம். நிவாரண பொருட்கள் வழங்கிய சமுக ஆர்வலர்

மழையில் சுவர் இடிந்து சேதம். நிவாரண பொருட்கள் வழங்கிய சமுக ஆர்வலர்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் மாடியனூர் மாடி ராஜபாளையம் தெருவை சேர்ந்த ராஜாமணி நாடார் – ராஜாத்தி அம்மாள் ஆகியோர் வசித்து வந்த வீடு நேற்று பெய்த மழையில் சுவர் இடிந்து சேதம் அடைந்தது.

சேதம் அடைந்த வீட்டினை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், கிளைக் கழகச் செயலாளர் சரவணன், ஒன்றிய பிரதிநிதி நியூட்டன், முன்னாள் செயலாளர் காமராஜ் ,

பொடியனூர் சிவன் பாண்டியன், சிவசைலனூர் ரூபன் லக்ஸ் டைலர் ,பால்த்துரை ,மாயாண்டி, சுதர்சிங் ஆசிரியர் அந்தோணி ராஜாங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டனர்.

பின்னர் அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களும் நிவாரண உதவித்தொகையும் வழங்கினர்.

CATEGORIES
TAGS