மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.
![மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன. மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221005-WA0038.jpg)
தஞ்சை மாவட்டத்தில் மழை விட்டு ஒருவாரம் ஆகியும் மேல உளுர், கீழ உளுர், துறையூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வடியாமல் வயல்களில் தேங்கி நிற்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நடவு நட்டு 15 நாட்கள் ஆன சம்பா நெல் பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன கழுகு பார்வை காட்சி.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 83 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சம்பா சாகுபடி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது பல பகுதிகளில் ஒரு மாதமாக நடவு பணிகள் முழு வெற்றி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரங்களில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் குருவை அறுவடை பணிகள் மற்றும் நடவு பணிகள் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கியது.
மழை விட்டு ஒரு வார காலம் ஆகியும் மேல உளுர், கீழ உளுர், துறையூர், பருத்தியப்பர் கோவில் உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்து 15 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் தண்ணீரில மூழ்கி உள்ளன.
மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
பூதலூர் செங்கிப்பட்டி வல்லம் ஆகிய பகுதிகளில் பையும் கனமழையின் காட்டாற்று வழிநீர் முறையாக வடிகால் வாய்க்கால தூர்வாரத காரணத்தால்தான் பயிர்கள் மூழ்கியதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் விரைந்து வாய்க்கால்களை கூறுவாரி தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்கள் கழுகு பார்வையில்.