BREAKING NEWS

மாங்காட்டில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

 

 

 

மாங்காட்டில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

 

சுமார் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்

 

காஞ்சிபுரம் மாவட்டம் ,குன்றத்தூர் ஒன்றியம் மாங்காடு நகர பகுதிக்கு உட்ப்பட்ட புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் பிரேம்சேகர் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளரும் ஆன சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் (முன்னாள் எம்எல்ஏ) மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய செயலாளருமான மாதனந்தபுரம் பழனி உள்ளிட்ட மாநில மண்டல மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் அதிமுக உறுப்பனர்கள் என பலர் கொண்டனர்.

இதில் மாங்காடு நகரத்திற்கு உட்ப்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவிற்கு புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் பேருக்கான புதிய அட்டைகளை முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் வழங்கினர்.இதில் மேற்கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்கப்பட உள்ளனர்.

இன்று நடைபெற்ற இந்த புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியினை குன்றத்தூர் ஒன்றியம் மாங்காடு நகர இளைஞர் பாசறை செயலாளர் பரத் ஏற்பாடு செய்திருந்தார் இதில் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அறு சுவை உணவு வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டது

CATEGORIES
TAGS