மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்
மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்…!
ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி &வேர்ல்ட் ஃபுனகோஷி ஷோடோகன் கராத்தே அமைப்பு சார்ந்து நடத்தும் கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா அளவிலான கராத்தே குங்ஃபூ ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்பு..
மாநில அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டி ஈரோடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தலைவர், SMA அகாடமி. தமிழ்நாடு தலைமை WFSKO
ஷாலின் வாரியர்ஸ் தற்காப்பு கலை அகாடமியின் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ஷிஹான். முஹம்மது யாஹ்யா,
ஈரோடு தலைமைப் பயிற்றுவிப்பாளர், எஸ்எம்ஏ அகாடமி, WFSKO எம்.முகமது ஹசன் அலி
ஆகியோர் தலைமையேற்றனர்.
3- வயது முதல் 18 வயது வரை உள்ளவருக்கு தனி தனி ஏஜ் கேட்டகிரியாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன பல்வேறு மாநிலத்தில் இருந்து 340 மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர் மாணவியர்களுக்கு மாநகராட்சி 39- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில், கேடயம் மற்றும் கோப்பைகள் வழங்கினார்.
இன்று நடைபெற்ற போட்டியில் தொழிலதிபர்கள், கராத்தே மாஸ்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.