மாநில அளவில் கலை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கி,ரொக்கத்தொகை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்,மாநில அளவில் கலைப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,பாராட்டி பரிசு வழங்கி, ரொக்க பரிசும், வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,பேசியதாவது- மானவ-மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாது தனி திறமையிலும் செயல்பட வேண்டும் ஒவ்வொருவரும் ஏதோ கலையில் சிறந்து விளங்க முயற்சி செய்ய வேண்டும்.தமிழக அரசு, கல்வித்துறைக்கு அதிக முக்கியத்தும் அளிக்கிறது.நமது மாவட்டத்தில் உள்ள நூலகங்களை பயன்படுத்தி அறிவுதிறனில் முன்னேற வேண்டும். இஸ்ரேல் சிறிய நாடு ஆனால் அறிவில் சிறந்து,பொருளாதாரத்திலும் உயர்ந்து உள்ளது.அதற்கு காரணம் அந்நாட்டில் குறைந்தபட்சம் கல்வி நிலையே Ph.D ஆக உள்ளது.எனவே நமது மாணவ மாணவிகள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் எனக் கூறினார்.நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகளும்,ஆசிரியர்களும், ஆசிரிய பெருமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.