மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமம் வடக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி பந்தல்கால் முகூர்த்தம்,காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .
இன்று காவிரிக் கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களுடன் வான வேடிக்கை மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.