BREAKING NEWS

மாற்றுத்திறன் குழந்தைகள் 15 பேரின் 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணம்


ராமேஸ்வரம்- சென்னைக்கு ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நடக்கிறது
11 நாள்கள் பயணத்தில் 15 பேர் பங்கேற்பு….
ராமநாதபுரம், ஆக.4-
வேவ் ரைடர்ஸ் குழுவானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து சிறப்புப் பயிற்சி தேவையுள்ள குழந்தைகள் 15 பேர் (மாற்றுத்திறன் குழந்தைகள்) பங்கேற்கும் ராமேஸ்வரம் முதல் சென்னை கடற்கரை வரையிலான 604 மீட்டர் தொடர் நீச்சல் பயணம் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வேர்ல்ட் ரிக்காட்ஸ் யூனியன் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காகவும், மாற்றுத்திறனுடையவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் மண்டபம் கடற்கரையில் இருந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 5 மணிக்கு நீச்சல் பயணம் தொடங்குகிறது.
மண்டபத்தில் இருந்து தொடங்கும் பயணம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 11 நாள்கள் நடக்கிறது. தொண்டி, காட்டுமாவி, வேளாங்கண்ணி, தரங்கப்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈச்சம்பாக்கம் கடல் மார்க்கமாக, சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையை ஆக. 15-ஆம் தேதி வந்தடைகிறது.
இந்தப் பயணத்தை தமிழ்நாடு மீனவர் சம்மேளத்தின் நிறுவனரும் தலைவருமான ஆர்.அன்பழகன் தொடங்கிவைக்கிறார். பாரா டேபிள் டென்னிஸ், பாரா பெண்கள் திட்டக் குழு ஆகிய அமைப்புகளின் தலைவரும் சமூக சேவகியும் யோகா மாஸ்டருமான டாக்டர் கே.தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசுகிறார்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத் துணைத் தலைவர் தாஜூதின், சூரஜ் ரிசார்ட், அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஏ.ஆர்.ஷாம்லால், ராமநாதபுரம் டி.எம்.பி. தலைவர் ஜே.பிரின்ஸோ ரேமண்ட், மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் எம்.தினேஷ்குமார், கோச் டீம் இந்தியா தலைவர் அப்பாஸ் அலி, சென்னை எஸ்டிஏடி ஸ்டேடியம் அலுவலர் லோகநாதன் மற்றும் பலர் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
நீச்சல் பயணத்தில் எம்.அபினவ் காஞ்சி, கே.கணேஷ், ஹரேஷ் பரத்மோகன், ஜோஸ்வா அபிராம் இமானுவேல், கே.லக்க்ஷை குமார், லக்க்ஷை கிருஷ்ணகுமார், கே.லிதீஷ் கிருஷ்ணா, ஏ.மோகன்ராஜ், கே.சி.நந்திகா, கே.ரித்தேஷ், ரோஷன்ராஜ் லெனின், வி.சித்தார்த், ஆர்.ஸ்ரீராம் சீனிவாஸ், எம்.தேஜஸ், பி.விஷால் மாதவ் ஆகிய 15 பேர் நீச்சல் பயணத்தில் பங்கேற்று சாதனை படைக்க இருப்பவர்கள்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வரும் நீச்சல் பயண விவரம்.
ஆகஸ்ட் 5 காலை 6 மணிக்கு ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, தொண்டிக்கு மாலை 6 மணிக்கு சேருகிறது. தொண்டியில் தங்குதல்.

ஆகஸ்ட் 6 காலை 6 மணிக்கு தொண்டி கடற்கரையில் இருந்து புறப்பட்டு, காட்டுமாவடி கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. காட்டுமாவடி தங்குதல்.

ஆகஸ்ட் 7 காலை 6 மணிக்கு காட்டுமாவடி கடற்கரையில் இருந்து புறப்பட்டு, வேளாங்கண்ணி கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. வேளாங்கண்ணி தங்குதல்.
ஆகஸ்ட் 8 காலை 6 மணிக்கு வேளாங்கண்ணி கடற்கரையில் இருந்து புறப்பட்டு, தரங்கம்பாடி கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. தரங்கம்பாடி தங்குதல்.
ஆகஸ்ட் 9 காலை 6 மணிக்கு தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து புறப்பட்டு, பழையாறு கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. பழையாறு தங்குதல்.
ஆகஸ்ட் 10 காலை 6 மணிக்கு பழையாறு கடற்கரையில் இருந்து புறப்பட்டு, பரங்கிப்பேட்டை கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. பரங்கிப்பேட்டை தங்குதல்.
ஆகஸ்ட் 11 காலை 6 மணிக்கு பரங்கிப்பேட்டை கடற்கரையில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. புதுச்சேரி தங்குதல்.
ஆகஸ்ட் 12 காலை 6 மணிக்கு புதுச்சேரி கடற்கரையில் இருந்து புறப்பட்டு, மரக்காணம் கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. மரக்காணம் தங்குதல்.
ஆகஸ்ட் 13 காலை 6 மணிக்கு மரக்காணம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, மகாபலிபுரம் கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. மகாபலிபுரம் தங்குதல்.
ஆகஸ்ட் 14 காலை 6 மணிக்கு மகாபலிபுரம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, ஈச்சம்பாக்கம் கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. ஈச்சம்பாக்கம் தங்குதல்.
ஆகஸ்ட் 15 காலை 6 மணிக்கு ஈச்சம்பாக்கம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, சென்னை கண்ணகி சிலை மெரீனா கடற்கரையை மாலை 6 மணிக்கு சேருகிறது. பயணம் நிறைவு..
இந்த நிகழ்ச்சி குறித்து கூடுதல் விவரங்களுக்கு பயணத்தில் பங்கேற்க உள்ள பெற்றோர் சார்பாக, ஆர்.வனிதாவை 95000 40969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share this…

CATEGORIES
TAGS