BREAKING NEWS

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய சுகாதாரக் குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய சுகாதாரக் குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தேசிய சுகாதாரம் குழும இயன் முறை மருத்துவர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

அந்த மனுவில் தமிழக சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத் திட்டத்தில் இயன்முறை மருத்துவராக பணியில் சேரும்போது தனியார் ஏஜென்சி மூலம் புற ஆதார அடிப்படையில் மாத சம்பளமாக 13,000 ஊதியமாக பெற்று பணிபுரிந்து வருகிறோம்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக வாடகை அடிப்படையில் இயன்முறை மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு குறைந்தபட்ச பணி பலனாக PF , 5% சதவீத வருட ஊதிய உயர்வு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

Share this…

CATEGORIES
TAGS