மாவட்ட செய்திகள்
கபிஸ்தலம் அருகே அனுமாநல்லூர் வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.
கபிஸ்தலம் அருகே உள்ள அனுமாநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயசுவாமி தொன்மையானதும், பிரசித்தி பெற்றதும் ஆகும், இராவணனை வீழ்த்திய பிறகு, இராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுடன் அயோத்தி செல்லும் வழியில் தங்களை யாரோ பின்தொடர்வதை போல உணர்ந்து அது குறித்து சிந்திக்கும் போது அது கரண் துஷனணை கொன்ற தோஷம் என அறிந்து கொள்கிறார்.
எனவே இதனை போக்க, குடமுருட்டி ஆற்றங்கரையோரம் அமைந்த வில்வமரத்தடியில் சிவபூஜை செய்ய முடிவு செய்து இதற்காக அனுமனை காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வர பணிக்கிறார், அவரும் அங்கிருந்து லிங்கம் கொண்டு வரும் முன்னர், சீதா தேவி ஆற்று மணலிலேயே 107 சிவலிங்கங்களை பூஜைக்காக தயாரான போது அனுமன் சிவலிங்கத்துடன் வந்து விடுகிறார் எனவே 108 லிங்கமாக அதனை வைக்க சீதாதேவி பணிக்க, அனுமனும் கீழே வைத்த லிங்கத்தை நகர்த்த முயலும் போது அதில் அவர் தோற்று வால் அறுந்து அனுமன் கீழே விழுகிறார் அந்த இடமே இத்திருக்கோயில் அமைந்த கிராமமான நல்லூர் ஆகும் அதன் பிறகு, இக்கிராம மக்களால் அனுமாநல்லூர் என அழைக்கப்படுகிறது, அனுமன் கொண்டு வந்த லிங்கம் இன்றும் பாபநாசம் 108 சிவாலயத்தில் 108வது லிங்கமாக அதாவது ஹனுமந்த லிங்கமாக போற்றி வணங்கப்படுகிறது.
இத்தகைய பெருமை கொண்ட தலத்தில், அமைந்துள்ள திருக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு அதற்காண திருப்பணி வேலைகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 01ம் தேதி மகாகணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி காப்பு கட்டுதல் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி, கும்ப அலங்காரம், விசேஷ மூலமந்திர ஹோமம் தொடங்கி பிறகு மறுநாள் பஞ்சசுத்த ஹோமம், ஆகியவையும் பின்னர் அதனை தொடர்ந்து 3. நாம் யாக சாலை பூஜைகள் நிறைவாக மகா பூர்ணாஹ_தியும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பிறகு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து மகா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்நதனர்.