மாவட்ட செய்திகள்
இன்று வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம்.

இன்று வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு கூட்டத்தை துவங்கினார்.

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேவையான வசதி ஏற்பாடுகள் செயல் தருவதற்கான சிறப்பான முறையில் கலந்துரையாடப்பட்டது .

இதில் வேலூர் மாவட்ட குழு தலைவர் மற்றும் திட்ட குழு தலைவர் மு. பாபு அவர்களின் தலைமையிலும் மற்றும் மாவட்ட கவுன்சிலர் அரசு ஊழியர்களும் மற்றும் போக்குவரத்து துறை மற்றும் கல்வித் துறைக்கான அதிகாரிகளும் இந்த கலந்துரையாடல் கலந்து கொண்டனர் .



இதில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான வருகின்ற அரசுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு படிப்பதற்கும் மற்றும் செல்வதற்கும் எந்த ஒரு தடையும் இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பேருந்துகள் வசதிகளும் இதில் செய்துதரப்படும் என்று கல்வித் துறை மற்றும் போக்குவரத்து துறை அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
