மாவட்ட செய்திகள்
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் திடீர் மழை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெயர் துவங்கிய மழை வெளுத்து வாங்கியது மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் சூறாவளி காற்று வீசியதால் மக்கள் கடும் வெப்பத்தால் அவதி யடைந்து வந்த நிலையில் மாலை முதலே வானம் மேக மூட்டம் ஆகவே காணப்பட்ட நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்கள் ,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் மேலும் இடைவிடாது கனமழையால் ஒருவித குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது தற்போது பெய்துள்ள மழையால் மானாவாரி சாகுபடி நிலங்களில் மக்காச்சோளம் சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கேரளாவில் பருமழை துவங்கி இருக்கும் நிலையில் உடுமலை பகுதியில் மழை பெய்ய துவங்கி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
