மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு மாத குழந்தை பார்க்க சென்ற 22 வயது தந்தை சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி உயிரிலப்பு.

கை குழந்தையுடன் கணவன் உடலை கண்டு ஆனாதையாக நிற்க்கும் 20 வயது இளம் பெண்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கே.அத்திக்கோம்பை இந்த பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் என்ற 22 வயது இளைஞர் இவர் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் வேப்பன்வலசு கிராமத்தை சேர்ந்த லாவண்யா எனற 20 வயது பெண்ணிற்கும் திருமாணகி தற்போது அவருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதனால் மணைவி லாவன்யா தனது தாய்வீட்டில் உள்ளார்.
அவரை பார்க்க நேற்று வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மணைவி மற்றும் கை குழந்தையை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற அருண்குமார் நிலைதடுமாரி 16 புதூர் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த சத்திரபட்டி போலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு இறந்த அருண்குமாரின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளனர்.
வேலைக்கு சென்ற கணவர் வீடு திறம்பவில்லையே என்று உடலை பார்த்து எழுந்து வா அருணு குழந்தை கேட்கிறது என்று சத்தமிட்டு கைகுழந்தையுடன்அழுது புலம்பும் இளம் பெண்ணை பார்ப்போரின் கண்களை கலங்கச் செய்து உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
