மாவட்ட செய்திகள்
திருச்சியி சமயபுரம் கோவில் அர்ச்சகரை தாக்கிய காவலர் கைது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின்
உபகோயிலான முக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் மகேஸ்குமார் அர்ச்சகராக பணியில் சேர்ந்தார். அப்போது சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காவலர் பணிபுரிந்து வந்த
வரதன் என்பவர் பணிக்கு குடித்து விட்டு வந்தார். இதனை கண்ட அர்ச்சகரான மகேஸ்குமாரை அவரை கடுமையாக திட்டி உள்ளார்.
மேலும், மகேஸ்குமாரை உடனே வேலையை விட்டு ஓடிவிடுமாறு மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்குமார் இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வரதனை தேடி வந்தனர்.
அப்போது வரதன் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். ஆனால் நீதிமன்ற அவரை ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் நிபந்தனையின் படி தொடர்ந்து ஆஜராகாததால், நீதிமன்றம் வரதனை கைது செய்ய உத்தரவிட்டது அதன்படி காவல்துறையினர் வரதனை சமயபுரம் செய்தனர்.