மாவட்ட செய்திகள்
திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய ஆம்னி பேருந்து!! கோயம்பேட்டில் பரபரப்பு!!

சென்னையில் காய்கறி சந்தை கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் செய்யப்படும். இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் நெரிசலான பகுதியாக உள்ளது.

எந்த நேரமும் காய்கறி, பழங்கள், பூக்கள் இவற்றை ஏற்றி வரும் வாகனங்களின் வரிசை நீளும். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் மிக அதிகம். இப்பகுதியில் தனியார் பார்க்கிங் வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

குப்பைத் தொட்டியில் எரிந்த தீ வேகமாக பரவியதில் 5 மாதமாக செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து குபுகுபுவென தீப்பிடித்தது. உடனடியாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் பொருள் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே பரபரப்பாக செயல்பட்டு வரும் கோயம்பேடு இச்சம்பவத்தால் மேலும் பரபரப்புக்குள்ளாகியது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
