BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் காவிரி ரோட்டரி சங்கம் சார்பில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.

தஞ்சாவூர் காவிரி ரோட்டரி சங்கம் சார்பில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பங்கேற்பு.

தஞ்சாவூர் காவிரி ரோட்டரி சங்கம் சார்பில் குந்தவை நாச்சியார் மகளிர் கலை கல்லூரியில் படித்து வரும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காவேரி ரோட்டரி சங்க தலைவர் தெய்வீகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி முன்னிலை வகித்தார். காவிரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மீனாட்சி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்துகொண்டு இளங்கலை மற்றும் முதுகலை ஏழை மாணவிகள் 31 பேர்களுக்கு கல்வி உதவித்தொகை ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் நாராயணன், மகளிர் மேம்பாடு சேர்மன் சரவணன், கல்வி மேம்பாடு சேர்மன் செந்தில் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )