BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதை கண்டித்து தஞ்சையில் காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் ஒருங்கிணைப்பு சார்பில் பட்டினி போராட்டம்.

தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசையும், அதற்கு துணைபோகும் கர்நாடக அரசையும் கண்டித்து தஞ்சையில் காவிரித்தாய் இயற்கை வழி வேளான் உழவர் நடுவம் ஒருங்கிணைப்பு சார்பில் பட்டினிப் போராட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் ஒருங்கிணைப்பு தலைவர் அரு.சீர். தங்கராசு தலைமை வகித்தார். பொன்னை. சின்னத்துரை வரவேற்றார். வழக்கறிஞர் பிரகாஷ், இராமநாதன், மாதர் சங்கத் தலைவி கலைச்செல்வி, மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் மதியழகன், சூரியக் கோட்டை சம்பந்தமூர்த்தி, விவசாய தொழிற்சங்கம் ராஜலிங்கம், திருப்புவனம் விக்டர் மரியசூசை, மூவேந்தர் அனைத்து கட்டட தொழிலாளர் சங்க நிறுவனத்தலைவர் கனகராசு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பட்டினிப் போராட்டத்தை தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். காவிரி செல்வன் சுடர் விக்னேஷ் திருவுருவப் படத்தை ஆசிரியரே வியனரசு திறந்துவைத்தார்.
இந்த போராட்டத்தில் தலைவர் தங்கராசு கூறும்போது:
தமிழக விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ள காவிரி பிரச்சனை சுமார் 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும். 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டும் என்று என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பதை கண்டிப்பது. மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசை கண்டிப்பது. தமிழகத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் பண்ணை குட்டைகளை அமைக்க வேண்டும். மண்ணில் உள்ள நுண்ணறிவு உயிரினங்களை அளிக்காமல் இருப்பதற்கு ஆற்றின் நடுப்பகுதிகளில் சிமெண்ட் தரை தளம் போட்டிருப்பதை அகற்றிவிடவேண்டும். மேலும் ஆறுகளை தூர்வாரி செப்பனிடும் போது, அங்கு சிமெண்ட் தரைத்தளம் அமைப்பதே கைவிடவேண்டும். மாணவர்களுக்கான கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் தலைவர் விளார் மதியழகன் கூறும்போது:
கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையை வாங்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி கல்வி கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக உள்ள காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக மானியத்துடன் கூடிய பம்பு செட் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இந்த போராட்டத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா சிறப்புரையாற்றினார். மாலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் கோபாலகிருஷ்ணன் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )