மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே உலக ஆரோக்கிய தினம் சோழாஸ் ரோட்டரி சங்கம் நடத்தியது.

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் தத்து கிராமமான கரந்தை பத்து கட்டு கிராமத்தில் உலக ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் விவியன் அசோக் தலைமை வகித்தார். துணை ஆளுநர் பெலிக்ஸ் சுந்தர், முன்னாள் தலைவர் லாரன்ஸ், நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், துணை வேந்தன், ரமேஷ், பொறுப்பாளர் சந்தன சாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொண்டனர். அனைவர்களுக்கும் மாத்திரை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
