மாவட்ட செய்திகள்
சமூக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு.

சமூக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு.
இடம்:விருசடி காலனி,மைலாடி மைலாடியில் “சமூக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு” முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் திரு.S. ஜான்சன் ராஜ் நிர்வாக இயக்குநர்(புரோ-விஷன் குழந்தைகள் எலும்பியல் மற்றும் மறுவாழ்வு மையம், மைலாடி),மற்றும் யூரிக் லோரின்ஷன் President of Patengemischaft -Germany அவர்கள் வருகை தந்தனர். சிறப்பு விருந்தினராக திருமதி.T.அமல சரண்யா கோட்டார் சமூக சேவை சங்கம் -திட்ட ஒருங்கிணைப்பாளர் வீதிகளை சுத்தமாக வைத்திருப்பது,நெகிழி மற்றும் நெகிழி பைகளை உபயோகபடுத்தினால் ஏற்படும் தீமைகளையும்,மக்கும் மற்றும் மாக்காத குப்பைகளை தனித்தனியாக குப்பைத் தொட்டிகளில் போடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் விரிவாக எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.பின்னர் பாராட்டு உரை
திரு.M.சொர்ண ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.இதை தொகுத்து வழங்கியவர் புரோ-விஷன் குழந்தைகள் எலும்பியல் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி சி.ஆர்த்தி.இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள்,பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
