மாவட்ட செய்திகள்
தேனி-அல்லிநகரம் நகராட்சி பல்வேறு பகுதிகளில் நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி புதிய பஸ் நிலையம் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள், பாரஸ்ட் ரோடு 5-வது தெருவில் சாக்கடை பாலம் அமைப்பது, வார்டு பகுதிகளில் போர்வெல் சின்டெக்ஸ் தொட்டிகள் சீரமைப்பது, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.


மேலும் தேனி பழைய ஜி.எச் ரோடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உணவின் தரம் குறித்து உணவருந்தி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமார், இளநிலை பொறியாளர் குணசேகரன், கவுன்சிலர்கள் பாலமுருகன், கடவுள், பிரிட்டிஷ் ராஜ்குமார் உள்பட நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
