மாவட்ட செய்திகள்
தாடிக்கொம்பு -இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகின்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நிருபர்களுக்கு பேட்டி.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகின்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு. அவர் கூறுகையில். பழனியில் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதத்தில் 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்களிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகள் 872 மீட்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது மேலும் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என கூறினார். இந்நிகழ்வில் உடன் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் , இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் குமரகுருபரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையாளர் பாரதி , மற்றும் அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் என் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
