மாவட்ட செய்திகள்
திராவிட கழகம் சார்பில் தஞ்சையில் நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொதுக்கூட்டம்.

திராவிட கழகம் சார்பில் தஞ்சையில் நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தேவைப்படுகிறது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி நீட் தேர்வினால் இந்த மாநிலத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தான் பயனடைகிறது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பயன் கிடையாது வடமாநிலத்தவர்கள் தான் வாய்ப்பு கிடைக்கிறது. குலக்கல்வியின் புதிய வடிவம் தான் புதிய கல்வி கொள்கை, இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகத்தின் கவனத்தை இழுக்க கூடிய வகையில் இந்தியாவின் முதல் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாக பட்ஜெட் வரவு செலவு கணக்காகத்தான் பட்ஜெட் உரையில் திராவிடக் கொள்கையை கொண்ட நிலை அறிக்கையாக தற்போதுள்ள நிதிநிலை அறிக்கை உள்ளது.


குல கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாக இருக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கை கல்வி என்பது உரிமை இந்த உரிமையை மறுப்பதாக இருக்கிறது புதிய கல்விக் கொள்கை. 6 வயது முதல் 14 வயது வரை கல்வி இலவசம் கட்டாயம் இருந்த நிலையில் மூன்றாம், ஐந்தாம், 8 வகுப்பு தேர்வில் பொதுத் தேர்வு என கல்வியை பாதிக்கும் வகையில் உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
