மாவட்ட செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தற்கொலைமுயற்சி செய்யும் அவலம்.
கந்து வட்டி கொடுமை தாங்காமல் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம்.
நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுவுடன் சென்னை சென்ற தம்பதியினர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி நடூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட B. பள்ளிபட்டி லூர்து புரத்தில் வசிப்பவர் ஷீபா கணவர் பெயர் ராஜ்குமார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தன்னுடைய விவசாய செய்வதற்காக அதே பகுதியில் வசிக்கும் ஜான்சன் மகன் நடராஜன் என்கின்ற நாதன் இடம் 3 தவணையாக ரூபாய் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு வரை ரூபாய் 25 லட்சம் கட்டிய நிலையில் கடன் பத்திரத்தை தராமல் நடராஜன் என்கின்ற நாதன் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இதன் பின்னர் நாதன் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டபோது நீங்கள் கட்டிய 25 இலட்ச ரூபாய் அனைத்தும் வட்டியில் கழித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட ஷீபா அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது சம்பந்தமாக பலமுறை ஷீபா வசிக்கும் வீட்டிற்கு நேரடியாக சென்று மீதி பணத்தை கட்டச் சொல்லி ஆபாசமாக பேசியும் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வந்தார். என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஷீபா மானம் தாங்க முடியாமல் தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலை முயற்சி செய்தனர் இதை கண்ட அக்கம் பத்தின அக்கம்பக்கத்தினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது. பொம்மிடி நடூர் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் தீபா ராஜ்குமார் ஆகியோர் நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனு விடுத்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி விசாரணை செய்தி அறிக்கை அனுப்புமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி பட்டிருந்தனர்.இதனைத் தொடர்ந்து பொம்மிடி காவல் நிலைய காவலர்கள் மனுதாரர் ஷீபாவை தொடர்பு கொள்ளாமல் .நேரடி விசாரணை நடத்தாமல் சமாதானமாக சென்றுவிட்டனர் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதை அறிந்த தம்பதியினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கேட்டனர். எந்த பதிலும் கூறாமல் காவலர்கள் நடந்துகொண்டார் என்று தெரிவித்தனர். கந்துவட்டி கும்பலிடமிருந்து எனது பிள்ளைகளுக்கு கொலைமிரட்டல் வருவதால் எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சம்பந்தப்பட்ட கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.