மாவட்ட செய்திகள்
காட்பாடியில் 5 வயது சிறுவன் 3 உலக சாதனை நிகழ்த்தி அசத்தல்: வேலூர் எஸ்.பி.சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ந தி பிரிட்ஜ் அறக்கட்டளை, அச்சம் தவிர் பவுண்டேஷன், ஃபிலிம் டெக்னாலஜி ஆகியவை இணைந்து உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தியது.
இதில் 5 வயது சிறுவன் ஜெனோ பிராங்க்ளின் தீப்பந்த சிலம்பம் சுற்றியவாறு பின்னோக்கி நடந்து காண்பித்தான். அதே போல் 24 பானைகள் மீது நின்ற படி சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினான்.
இந்த சாதனைகள் கலாம் புக் ஆஃப் இந்தியா ரெகார்ட், சாதனையாளர் யூனிவர் அச்சிவர் புக் ரெகார்ட்ஸ், மற்றும்
கலாம் ரெகார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்றது .இது வரை சிறுவன் 8 உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஐந்தாவது வட்ட திமுக பிரமுகர் விநாயகம், 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன், காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் ஜோதீஸ்வரபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்து கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
