மாவட்ட செய்திகள்
ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் கைது செய்யப்படுவர்.அமைச்சர் துரைமுருகன்!

அதிமுக ஆட்சியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி பகுதியில் இன்று இடத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியின் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இது குறித்து முறையான விசாரணை தொடங்க உள்ளது இந்நிலையில் காட்பாடி அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது .
அந்த முறைகேடுகளை முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என ஆவேசமாக கூறினார்.
எனவே தற்போதுள்ள அதிகாரிகள் உஷாராக பணியாற்ற வேண்டுமென எச்சரித்தார்.
சேர்க்காடு பகுதியில் இந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும்.
100 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை சேர்க்காடு பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பணி விரைவில் தொடங்கவுள்ளது.
மகி மண்டலம் பகுதியில் தொழிற்பேட்டை இந்தாண்டு கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
