மாவட்ட செய்திகள்
சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்.

நாகர்கோவில் திருச்சிலுவை கல்லுரி ( தன்னாட்சி) சமூகப் பணித்துறையும் சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியும் இணைந்து சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ” பரீட்சை பயம் மற்றும் எளிதாக கற்றுக்கொள்வதற்கான நுட்பங்கள்” என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடந்தது .

முகாமில் திருச்சிலுவைக் கல்லுரி சமுகப்பணித் துறை மாணவி அ.சகாய ராணி வரவேற்றார்.முகாமை தொகுத்து வழங்கியவர் திருச்சிலுவைக் கல்லுரி சமுகப்பணித் துறை மாணவி தேவ தர்ஷினி ஆவர் . கன்னியாகுமரி மாவட்டம் சமுக பணி துறை திருமதி.ஜெய் சித்ரா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.முடிவில் சமுகபணித் துறை மாணவி அ.சகாய ராணி நன்றியுரை கூறினார் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சமூக பணி துறை மாணவி கே.எம்.அம்ருதா ஆவார்.இந்நிகழ்வில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
