மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் நீதி மய்யம் மாநில வக்கீல் அணி செயலாளர் ரவிசங்கர் தலைமையில் இரு சக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும்இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்ற புள்ளி விவரங்களை தெரிவிக்கும் மத்திய அரசு, மக்கள் கொஞ்சம் வெளியே வரும்போது அவர்களின் அன்றாட தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஏற்றி உள்ளது.
தினம், தினம் மக்களின் மீது மேலும் சுமையை ஏற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் சார்லஸ், மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கண்ட கோஷம் எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.