மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே பெண் உதவி ஆய்வாளர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சி அருகே பெண் உதவி ஆய்வாளர் தூக்கு மாட்டி தற்கொலை – உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை.
திருச்சி மாவட்டம், டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன்.
இவரது மனைவி ஆதிலட்சுமி(56). நவல்பட்டு நிரந்தர காவலர் பயிற்சிப் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வந்தார். காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காவலர் குடியிருப்பில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த நவல்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமியின் தற்கொலைக்கு கடன் பிரச்சனை நோய் மட்டும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து நவல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்டு இறந்து போன உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஒருவர் லெனின் BE மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
மற்றொருவர் பாரத், தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருகிறார்.
மற்ற பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும் பணியில் இருக்கும் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
