மாவட்ட செய்திகள்
மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

மின் கட்டண உயர்வு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேற்று 9/04/22, பகல் 11-00 மணியளவில் மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வு கண்டித்தும் புதுச்சேரி மாநில அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விறகு அடுப்பில் சமையல் செய்தும், கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலை அணிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புறநகர் பகுதி பொதுச்செயலாளர்ர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள் அரிகிருஷ்ணன், ராமஐயப்பன், ஆனந்த், பிராங்க்ளின் பிரான்சுவா, ரூபன்கிறிஸ்டோபர் தாஸ், சக்திவேல், ருத்ரகுமாரன், சோமநாதன் மற்றும் தொகுதி செயலாளர்கள் ஜோலலஷ்மன், சக்திவேல், பட்டு ரோஸ், கோபாலகிருஷ்ணன், கலிவரதன், சங்கர், பழனிவேலன்,சரவணன், சரவண பெருமாள், கருணாகரன், தென்னரசு, தேவ்நாத், ஐயனார் அணிச்செயலாளர்கள் மகின்பர்வத், கண்ணன், ஞானஒளி, கௌரி, செல்வி, ஜெயந்தி, சிகரம் சுப்பிரமணி, வாசுகி, ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
