மாவட்ட செய்திகள்
உடுமலையில் புதிய தேர் பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு.

அருள்மிகு மாரியம்மன் திருக் கோவில் ஆய்வு பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று உடுமலை வந்திருந்தார். பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ் ஷிரிதர் மற்றும் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கோவிலை சுற்றிப் பார்த்தபின் அதிகாரிக ளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ள பாளையம், கணியூர், குமரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து தேரை பார்வையிட்டார்.


மேலும் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப் பட்டு வரும் 8 கோண தேரை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் வினீத், அற நிலையத் துறை உயர் அதிகாரிகள். எம்பி கு.சண்முகசுந்தரம், திமுக மாவட்டச் செயலாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வர் கோவிலில் ஆய்வு பணிகளுக்கு கிளம்பிச் சென்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
