BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பாஜக நகரம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வடக்கு மாவட்டம் பாஜக நகர கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது. பாஜக நகரச் செயலாளர் ஸ்ரீ சேஷாத்ரி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பாஜகவின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து‌ இளநீர், மோர் மற்றும் பழரசம், தர்பூசணிபழம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர் குமார், சரவண கிருஷ்ணன், நகர பொதுச் செயலாளர் முனியராஜ், கயத்தார் பாஜக மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், நகர பொதுச் செயலாளர் சீனிவாசன், வர்த்தகப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் நல்லதம்பி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட தலைவர் அமுதா கணேசன் கோமதி, வெங்கடேசன், மகளிர் அணி மாவட்ட தலைவி நீலாவதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் போத்திராஜ், ஒன்றிய தலைவர் லட்சுமணன், ஒன்றிய பொதுச்செயலாளர் மாடசாமி, மாரிமுத்து ராஜா, ஒன்றிய துணைத் தலைவர் சந்தானம் உள்ளிட்ட பாஜக நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்‌.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )