மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில்’ நடைப்பெற்ற கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தின்போது அரசுப்பள்ளிகளில் ஏழை மாணவர்களிடம் ரூ.200 கணினி கட்டணமாக வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமையில் நடைப்பெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தின்போது மாவட்ட செயலாளர் அலைக்சாண்டர் மேற்கு மண்டல செயலாளர் மாதேசன், மேற்கு மண்டல மகளிர் அணி செயலாளர் திருமதி ஆனந்திமாலா, மாவட்டப்பொருளாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலத்துக்
கொண்டு கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்கள்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் அரசுப் பொது தேர்வு நேரத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலையாசிரியர் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்பிட வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும், மேல்நிலை வகுப்புகளில் கணினிப் பிரிவுகளில் பயலும் ஏழை மாணவர்களிடம் ரூ.200 கணினி கட்டணமாக வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துக்
கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.