மாவட்ட செய்திகள்
தஞ்சையில் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை நிறைவு பெறுகிறது.
இதையடுத்து தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளில் போட்டியிடும் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
51 வது வார்டு திமுக பெண் வேட்பாளருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் அவருக்கு பதிலாக அவரது கணவர் வெற்றி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீதி வீதியாகச் சென்று அஞ்சுகம் பூபதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்