மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மெக்கானிக் தவறவிட்ட செல்போன் ஒப்படைப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மெக்கானிக் தவறவிட்ட செல்போன் ஒப்படைப்பு. செல்போனை எடுத்து ஒப்படைத்த வாலிபருக்கு எஸ்ஐ ஜெஸி மேனகா பரிசு வழங்கி கௌரவிப்பு. அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் இசக்கியப்பன் 23. இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அஞ்சுகிராமம் வக்கு பஜாரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வரும்போது சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவற விட்டு விட்டார். வீட்டிற்கு வந்தவர் தனது செல்போனை காணாமல் பரிதவித்தார்.
இந்நிலையில் மயிலாடியைச் சேர்ந்த மணிகண்டன் 32 என்பவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தினசரி நாளிதழ் போடும் வேலை செய்து வருகிறார். இவர் வீடுகளுக்கு நாளிதழ்களை போட்டு விட்டு அந்தப் பகுதியில் வரும்போது கீழே கிடந்த செல்போனை எடுத்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது செல்போனை தவறவிட்ட இசக்கியப்பன் அந்த செல்லுக்கு இன்னொரு செல்லில் இருந்து தொடர்பு கொண்டார் உடனடியாக போலீசார் அவரை அழைத்து அவரிடம் செல்போனை ஒப்படைத்தனர்.
மேலும் மனிதாபிமானத்தோடு செல்போனை தவற விட்ட உரியவரிடம் ஒப்படைத்த மணிகண்டனுக்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸிமேனகா பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
