BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நகரமன்ற கூட்டத்தில் அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து வந்து வெளிநடப்பு செய்தனர்.

எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நகர மன்ற தலைவர் டிஎம்எஸ் பாஷா தலைமையில் எடப்பாடி நகரமன்ற கூட்டம் திங்களன்று காலை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து நகர மன்ற அலுவலர்கள் சொத்து வரி உயர்வு குறித்து விவரத்தினை வாசித்தனர்.

அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி அமளியில் ஈடுபட்டனர்’ தொடர்ந்து அவர்கள் நகரமன்ற தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு திரும்ப திரும்ப பெறும் என கோஷமிட்டனர். இதனையடுத்து நகரமன்ற உறுப்பினர் முருகன் தலைமையிலான.அதிமுக உறுப்பினர்கள் தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து.

நகரமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்து கூட்டத் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நகரமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ. எம் முருகன். எடப்பாடி பகுதி மக்கள் ஏற்கனவே.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதாகவும், நெசவு தொழிலாளிகள் நிறைந்த எடப்பாடி பகுதி பொதுமக்கள் கடந்த கொரோனா பெரும் தொற்று காலத்தில் மேலும் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில் திமுக அரசின் இந்த கடுமையான சொத்து வரி உயர்வு சாதாரண ஏழை எளிய மக்களை பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், எனவே அதனை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.

என்றும் அதற்கான எதிர்ப்பினை பதிவு செய்யும் நோக்கிலேயே தாங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து மன்றத்தில் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்வதாகவும் கூறினார். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்பு பலகை தாங்கள் இப்போது நினைவு படுத்துவதாகும் உடனடியாக அரசு இந்த சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )