மாவட்ட செய்திகள்
வேடசந்தூர் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை திடீரென பலத்த மழை பெய்து வந்தது இதில் மாரம்பாடி கோட்டைமந்தை கிராமத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது அந்த பகுதியில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த வெள்ளிமலை என்பவரது மனைவி முனியம்மாள்(70)என்ற மூதாட்டி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டியை சுமார் ஒரு மணி நேரம் போராடி ஜேசிபி இயந்திரம் மூலம் இடிந்து விழுந்த சுவரை எடுத்து பின்பு தீயணைப்பு துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டனர் இதுகுறித்து தகவலறிந்த எரியோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு இடிந்து விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
