BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

முனீஸ்வரன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு போட்டியில், 12 காளைகளும், 90 காளையர்களும் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில், முனீஸ்வரன் ஆலய மாசிமக திருவிழாவை முன்னிட்டு வடமாடு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை தஞ்சை கோட்டாச்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார்.

முன்னதாக உறுதி மொழியினை ஏற்று கொண்ட காளையர்களுக்கும், காளைக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 மாடுபிடி குழுவும் பங்கேற்றது. ஒவ்வொரு காளைக்கும், ஒன்பது வீரர்கள் வீதம் 30 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளையர்களுக்கும் குக்கர், அயன்பாக்ஸ், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )