மாவட்ட செய்திகள்
கோடைக்காலத்தில் திருச்சி மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது – குடிசை மாற்று வாரியம் மூலம் 5ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படும் – மேயர் அன்பழகன் பேட்டி.

திருச்சியில் சாலையோரங்களில் தெரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் உரிமையாளர்கள் கால்நடைகளை சாலைகளில் திரிய விட கூடாது என மாநகராட்சி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெளியே சுற்றித் திரிந்த கால்நடைகளை பிடித்து கொட்டகைகளில் அடைக்கப்பட்டு பின்னர் உரிமையாளர்களுக்கு அபராதம் செலுத்திய பின்பு விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர்ந்து உரிமையாளர்கள் இதனை கடைப்பிடிக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்தை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து வெளிமாவட்ட காடுகளை விடுவதற்கான நடைமுறைகளை பின்பற்ற திருச்சி மாநகராட்சி துவக்கி உள்ளது. அதன்படி முதல் முதலாக திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட 10 வது வார்டில் இன்று 25பன்றிகளை பிடித்து செங்கல்பட்டு மாவட்டம் அருகில் உள்ள காடுகளில் விடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் பேரில் உரிய நடவடிக்கைகளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று ஸ்ரீரங்கம் பகுதியில் 25பன்றிகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை சாலைகள் திரிந்தால் அதற்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலையில் திரியும் தெரு நாய்கள் தொல்லை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5கோட்டங்களிலும் கட்டடங்கள் கட்டி நாய்கள் இனவிருத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நான் பதவியேற்ற பின்னர் பெறப்படும் மனுக்களில்
வரி மற்றம், பட்டா மாற்றி பதிவேட்டில் இறக்கம் செய்வது தொடர்பாக மனுக்கள் கொடுத்துள்ளனர்.
மேலும் பாதாள சாக்கடை சில இடங்களில் கேட்டு மனு கொடுத்துள்ளனர் இது தொடர்பாக இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். இலவச வீடுகள் வேண்டும் என கோரி அது தொடர்பான மனுக்கள் வந்துள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியான பஞ்சப்பூர் அருகில் சுமார் 5000 வீடுகள் கட்டி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு திட்டமிட்டு உள்ளார். ஒரு ஆண்டுக்குள் குடிசை மாற்று வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும்.
தற்போது திருச்சி மாநகராட்சிக்கு
130எம்.எல்.டி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது.
சில இடங்களில் தண்ணீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு வந்தாலும் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதிகள் முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் குடிதண்ணீர் காண புதிய பைப்புகள் மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பணிகள் விரைவில் சீர் செய்யப்படும்.
கோடை காலத்தில் திருச்சி மாநகராட்சி பொருத்தவரை தண்ணீர் தட்டுப்பாடு ஏதும் இருக்காது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
