BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி 22 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமுதா டீ கடையில் டீ விற்று வாக்கு சேகரித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடியம் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி 22வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமுதா சென்னை சாலை, தொன்னையான் கொட்டாய், மஹாரிஷு நகர், பெரியசாமி கவுண்டர் தெரு, வெள்ளகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து சென்னை சாலையில் உள்ள டீ கடையில் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.
ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் அமுதா கடந்த 9 மாதகால திமுக ஆட்சியில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை, கடந்த தேர்தலின் போது திமுக அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, 22வது வார்டின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வாக்கு சேகரித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )