மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் வடவாற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பு, நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளுக்கும் வார்டு வாரியாக தினந்தோறும் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்,


அதைப்போல் தஞ்சாவூர் மாநகராட்சி 13 வது வார்டு கரந்தை குளத்து மேட்டுதெரு பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது அப்பகுதி பாசன ஆறான வடவாற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகவும் பொதுமக்கள் ஆற்றினை பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும் கூறி குற்றஞ்சாட்டினர் இதையடுத்து உடனடியாக மேயர் ராமநாதன் ஆற்றினை பார்வையிட்டு கழிவு நீர் கலக்காதவாறு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு பணிகளை செய்ய உத்தரவிட்டார்,



தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி வார்டு கவுன்சிலர்கள் செந்தமிழ்செல்வன், சுகாசினி மற்றும் மாநகராட்சி உதவிப் பொறியாளர் அறச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
