மாவட்ட செய்திகள்
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு கடத்திய 50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா மற்றும் 3500 லிட்டர் கர்நாடக மதுபானம் பறிமுதல் இருவர் கைது.
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு கடத்திய 50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா மற்றும் 3500 லிட்டர் கர்நாடக மதுபானம் பறிமுதல் இருவர் கைது – போதைப்பொருள் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை .
கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் தமிழகத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் மாநில எல்லைகளில் வாகன சோதனைக்கு உத்தரவிட்டார்.
அந்த வகையில் ஓசூர் அடுத்த மத்திகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான லாரியை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா பான்மசாலா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது விசாரணையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தர்மலிங்கம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3500 லிட்டர் கர்நாடக மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய 12 லட்சம் மதிப்பிலான கண்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மதுபான பாக்கெட் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் 60 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் 12 லட்சம் மதிப்பிலான லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கர்நாடக மாநிலம் பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் 200க்கும் மேற்பட்ட கும்பல் குட்கா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அவர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் இனி குட்கா கடத்தல் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்
மேலும்குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.