மாவட்ட செய்திகள்
ரயில் முன் விழுந்து கல்லூரி மாணவன் தற்கொலை!! ரயில் நிலையத்தில் பரபரப்பு!!

புதுச்சேரியில் இருந்து விழுப்புரளம் நோக்கி சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் முன்பு திடீரென ஒருவர் பாய்ந்ததில், அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்&இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்&இன்ஸ்பெக்டர் தணிக்காசலம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்த பைக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கல்லூரி அடையாள அட்டையை கண்டுபிடித்த அவர்கள் அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.அந்த அடையாள அட்டையின்படி புதுச்சேரி வாணரப்பேட்டை, சக்தி வினாயகர் கோவல் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வநாதன் என்பது தெரிய வந்தது. அவருக்கு வயது 22. தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வநாதனின் தந்தை ஜெகநாதன், தனது மனைவியான வனஜாவை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். இதனால் பன்னீர்செல்வநாதன், தனது பாட்டி தனம் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். தந்தையே தாயை கொன்றது முதல் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில வாரங்களாக பன்னீர்செல்வநாதன் கல்லூரிக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில்தான் ரயில் முன்பு பாய்ந்து மாணவர் உயிரிழந்துள்ளார்.கல்லூரி அடையாள அட்டை இருந்த வண்டியில், தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்தப்படும் சுருக்கு முடிச்சு போட்ட ஒரு புடவையையும் போலீசார் கண்டுபிடித்தனர். மாணவனின் தற்கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
