BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் -வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளம், பெரியபள்ளம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலைகள் கடந்த சில வருடங்களாக மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் தினமும் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ- மாணவிகள் விவசாய பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை மேலும் சிதலமடைந்து வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ முருகேசன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய சந்திரிகா, சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது விரைவில் சாலை அமைக்கப்படும் என்றும் தற்காலிகமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி கூறியது அடுத்து போராட்டத்தை விடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த சாலை மறியல் காரணமாக கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரம் காத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )