மாவட்ட செய்திகள்
மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் கால்நடை மருத்துவமனை கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர்ப்புற பகுதியில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்பு மருத்துவமனை மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40க்கு மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்களது வளர்ப்பு கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை செய்து ஊசி போடப்படும் மருந்துகளை வாங்கி சென்றும் மாடுகளுக்கு சனை ஊசி போடுவதற்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை தற்போது கால்நடைக்கு போடப்படும் ஊசிகளின் கழிவுகளை அகற்றாமல் மருத்துவமனை வளாகத்திலேயே போடுவதால் தூய்மையின்றி துர்நாற்றம் வீசியும் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவல நிலையில் உள்ளதாகவும்

கால்நடை மருத்துவமனை குறைந்த நேரமே செயல்படுவதாலும் சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாததால் மது பிரியர்கள் மாலை வேளையிலும் இரவு வேலைகளில் உல்லாசமாக குடித்துவிட்டு பாட்டில்களை மருத்துவமனை வளாகத்திலேயே உடைத்து செல்வதால் நோய் தொற்று ஏற்பட்டு கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் விவசாயிகள் தங்களது மாடுகளின் கால்களில் பாட்டில் துண்டுகள் குத்துவதால் மேலும் பாதிக்கப்படுகிறது எனவும்

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கால்நடைத் துறையும் காவல் துறையும் வேடிக்கை பார்க்கின்றனர் எனவும் இனியாவது கால்நடை மருத்துவமனையை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனை வளாகத்தில் குடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
