மாவட்ட செய்திகள்
‘சிசுக்குரல்’ குறும்பட நடிகை தற்கொலை!! பிரபலங்கள் இரங்கல்!!
விழுப்புரம் இந்திரா நகரில் வசித்து வருபவர் 17 வயதான பள்ளி மாணவி துர்கா தேவி. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி துர்காதேவி, ‘சிசுக்குரல்’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்புதான் இந்த குறும்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பலர் அதிர்ச்சியும், சந்தேகமும் அடைந்துள்ளனர்.
இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் மாணவி துர்காதேவிக்கு தாங்க முடியாத வயிற்று வலி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று மாணவியின் உறவினர்கள் கூறி உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.