மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள குருவிகுளத்தில் தியான் பவுண்டேசன் சார்பில் இலவச பொது மருத்துவம் நடைபெற்றது.குருவிகுளம் வி.ஜி. மஹாலில் தியான் பவுண்டேசன், கழுகுமலை தியான் கிளினிக் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர். இதில் தியான் கிளினிக் மருத்துவர் சிவக்குமார், பிரகாஷ், காமேஸ்குமார் தலைமையில் பொது மக்களுக்கு மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பு மேலும் பொது மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு 235 நபருக்கு இலவசமாக சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாட்டினை தியான் பவுண்டேசன் நிர்வாகி கிருஷ்ணப்பிரியா, தியான் கிளினிக் மேலாளர் சஞ்சீவ் காந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.