மாவட்ட செய்திகள்
ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு: கடத்தூர் ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவர் கமலவேணி தலைமையில் இன்று நடை பெற்றது. கூட்டம் தொடங்கி யதும் கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கடந்த மாதம் நடைபெற்ற ஒரு சாலை பணிக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த மாதமும் நிதி ஒதுக்கப்படுவது ஏன்? என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் மாதாந்திர கூட்டம் நடக்கும் போது வரவு செலவு கணக்கு நகல், தீர்மான நகல் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் ஊராட்சி மன்ற தலைவர் பதிலளிக்காமல் அவரது கணவர் ஏன் பதில் அளிக்கிறார் எனக் கேட்டனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் போக்கை கண்டித்து 1, 2, 3, 5, 8 ஆகிய ஐந்து வார்டு கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கடத்தூர் ஊராட்சி மன்றத்தில் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
