BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு ஏப்ரல் 27 வரை சிறை!! அதிரடி உத்தரவு!!

சிவசங்கர் பாபா டெல்லியில் கைது: வலுக்கும் பாலியல் தொந்தரவு புகார்கள் - யார்  இவர்? - BBC News தமிழ்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.இங்கு தங்கி பயிலும் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். முன்னாள் மாணவிகள் உள்பட 3 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தார்.

 

தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை சிவசங்கர் பாபா தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீட்டு ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சில நிபந்தனைகளுடன்
சிவசங்கர்பாபாவுக்கு ஜாமீனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சிவசங்கர்பாபா தனது பள்ளி மற்றும் ஆசிரமத்துக்கு செல்லக்கூடாது.

High Court of Jharkhand, India
மேலும் சாட்சியங்களை கலைக்க முயற்சித்தால் சிவசங்கர் அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டி இருக்கும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பளித்தது.ஜாமீன் வழங்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சிவசங்கர் பாபாவை ஏப்ரல் 27 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )